தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக களமிறங்கிய சிவசேனை

காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியே 2024ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்கும் என சிவசேனை கட்சி எம்பி சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 அக்டோபர் 2021, 12:12 pm

DIN

பாஜகவை விமரிசித்துள்ள சிவசேனை கட்சி எம்பி சஞ்சய் ரெளத், காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் வகையிலான கூட்டணி அரசே 2024ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஜே.எஸ். கரண்டிகர் நினைவை போற்றும் விதமாக நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியை புனே பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்தது. அதில் பேசிய சஞ்சய் ரெளத், "காங்கிரஸ் இல்லாமல் எந்த அரசையும் அமைக்க முடியாது. காங்கிரஸ் நாட்டில் வேரூன்றி கிடக்கிறது. பெரிய கட்சியாக திகழ்கிறது. முக்கிய எதிர்க்கட்சியாகவும் உள்ளது. மற்றவை எல்லாம் பிராந்திய கட்சிகளே" என்றார்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து பேசிய ரெளத், "இந்திய அரசியலில் பாஜக தொடர்ந்து இருக்கும். ஆனால், எதிர்கட்சியாகவே இருக்கும். உலகின் மிகப்பெரிய கட்சி என்று பாஜக சொல்லி கொள்கிறது. உலகின் மிகப்பெரிய கட்சி தேர்தலில் தோற்றால் எதிர்க்கட்சியாகிவிடும். உதாரணமாக, மகாராஷ்டிராவில் 105 எம்எல்ஏக்களுடன் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது" என்றார்.

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து பேசிய அவர், "தாதர் மற்றும் நாகர் ஹவேலி, கோவாவில் தற்போது நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். உத்தரப் பிரேதச தேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் நாங்கள் சிறிய கட்சி ஆனால் நாங்கள் போட்டியிடுவோம்" என்றார்.

முன்னதாக, ஊடகம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, ஊடகவியலாளர்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற மைய மண்டபத்திற்குள் அனுமதிக்கவில்லை. ஆனால், அமைச்சர்களிடம் செய்தியாளர்களை பேச அனுமதித்தால் பல விஷயங்கள் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இந்தத் தடைக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம். 

கண்காணிப்பு வளையத்தில் அமைச்சர்கள் இருந்தாலும், செய்தியாளர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு அவர்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவசர பிரகடனம் விதிக்கப்பட்ட காலத்தில் கூட இப்போதிருப்பது போல் ஊடகங்கள் நிறுத்தப்படவில்லை. கங்கை நதியில் சடலங்கள் மிதப்பதைப் பற்றி ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது. வருமான வரித் துறை அந்த செய்தித்தாளின் அலுவலகங்களில் சோதனை நடத்தியது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.