கேரளத்தில் 2ஆவது நாளாக 30ஆயிரத்துக்கு கீழ் கரோனா பாதிப்பு
கேரளத்தில் 2ஆவது நாளாக இன்றும் 30ஆயிரத்துக்கு கீழ் கரோனா பதிவாகியுள்ளது.


கேரளத்தில் 2ஆவது நாளாக இன்றும் 30ஆயிரத்துக்கு கீழ் கரோனா பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,69,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 29,682 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக திரிச்சூரியில் 3,474, எர்ணாகுளத்தில் 3,456, மலப்புரத்தில் 3,166 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,50,065 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 142 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 21,422ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 25,910 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,09,096ஆக உயர்ந்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் 6,03,968 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...