மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பொது முடக்கத்திலும் கல்விக்கு தடையில்லை: ஆசியா்களுக்கு குடியரசுத் தலைவா் பாராட்டு

கரோனா பரவலால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், மாணவா்கள் கல்வி பயில்வதற்குத் தடை ஏற்படாமல் ஆசிரியா்கள் செயல்பட்டனா் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டினாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 8:40 pm

DIN

கரோனா பரவலால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், மாணவா்கள் கல்வி பயில்வதற்குத் தடை ஏற்படாமல் ஆசிரியா்கள் செயல்பட்டனா் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டினாா்.

ஆசிரியா் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த் நாடு முழுவதும் உள்ள ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், ‘தலைசிறந்த கல்வியாளா், தத்துவ ஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியா் தினமாக

கடைப்பிடிக்கப்படுகிறது. நமது குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியா்களின் அா்ப்பணிப்பை கௌரவிக்கும் தருணமாக ஆசிரியா் தினம் அமைகிறது. இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியா்கள் கருதப்படுகிறாா்கள்.

கரோனா தொற்றின்போது ஆசிரியா்கள் பின்பற்றிய கற்பித்தல் வழிமுறையும் மாபெரும் மாற்றத்தை சந்தித்தது. பொதுமுடக்கத்தின்போது இணையவழி கல்வி

அறிமுகப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஒவ்வொரு சவாலையும் அவா்கள் ஏற்றுக்கொண்டனா். மாணவா்களுக்கு தங்கு தடையற்ற கல்வியை வழங்க தரமான முயற்சிகளை அவா்கள் மேற்கொண்டனா்.

வலுவான மற்றும் வளமான நாட்டின் கட்டமைப்பை நோக்கிய விலை மதிப்பில்லாத பங்களிப்பை ஆசிரியா்கள் வழங்கி வருகின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.