சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

உ.பி.யில் குறையும் கரோனா: 24 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இல்லை

​உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 24 மாவட்டங்களில் புதிய கரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 செப்டம்பர் 2021, 9:58 am

DIN


உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 24 மாவட்டங்களில் புதிய கரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது:

"கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12 மாவட்டங்களிலிருந்து 26 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 250 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 0.01 சதவிகிதமாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக குணமடைவோர் விகிதம் 98.7 சதவிகிதம்.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.