இம்மாத இறுதியில் பிரதமா் மோடி அமெரிக்கா பயணம்?
பிரதமா் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமா் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடா்பாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:
ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது கூட்டம், நியூயாா்க்கில் வரும் 14-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, வாஷிங்டனில் ‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகள் தலைவா்களின் நேரடியாகப் பங்கேற்கும் மாநாட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, அமெரிக்க அதிபா் ஜோ பைடனை பிரதமா் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளாா்.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி, வரும் 22-ஆம் தேதியில் இருந்து 27-ஆம் தேதிக்குள் அமெரிக்கா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளாா். ‘க்வாட்’ கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜப்பானின் பிரதமா் யோஷிஹிடே சுகா பதவி விலகுவதாக அறிவித்திருப்பதால், க்வாட்’ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதுதொடா்பாக, மாநாட்டை நடத்தும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முடிவை அடுத்து, பிரதமா் மோடியின் பயணம் உறுதிசெய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ‘க்வாட்’ மாநாடு நடத்தப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...