எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆந்திரம் : காவல் நிலையத்தில் ரூ.16 லட்சம் திருடிய காவலர் கைது

ஆந்திரத்தில் பணி செய்து கொண்டிருந்த காவல் நிலையத்திலேயே ரூ.16 லட்சம் திருடிய காவலரை சென்னையில் கைது செய்தனர்.

News image
ஆந்திரம் : காவல் நிலையத்தில் ரூ.16 லட்சம் திருடிய காவலர் கைது
Updated On :6 செப்டம்பர் 2021, 10:13 am

DIN

ஆந்திரத்தில் பணி செய்து கொண்டிருந்த காவல் நிலையத்திலேயே ரூ.16 லட்சம் திருடிய காவலரை சென்னையில் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்வித் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் ஜனார்த்த நாயுடு என்பவர் கடந்த ஆக-29 ஆம் தேதி காவல் நிலையத்தில் பாதுகாப்புக் காரணமாக வைக்கப்பட்ட ரூ.16 லட்சத்தை திருடியுள்ளார். ஆனால் இச்சம்பவம் செப்-2 ஆம் தேதியே தெரிய வந்திருக்கிறது.

பணத்தை எடுத்துக் கொண்டு விடுமுறையில் சென்ற காவலரை செல்போனில் தொடர்பு கொண்ட காவல்துறையினருக்கு கைப்பேசி சில நாட்களாக அணைத்து வைக்கப்பட்டது தெரிந்ததும் தேடுதலில் ஈடுபட்டனர். 

தனிப்படை தேடுதலில் தற்போது இன்று (செப்-6) ரூ.14 லட்சத்துடன் சென்னையில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். 

திருட்டிற்கான காரணத்தை விசாரித்த போது சில நாட்களாகவே ஜனார்த்தன் நாயுடு குடும்ப பிரச்னைகளால் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

மேற்கொண்டு விசாரணை நடைபெறும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.