டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

யூத புத்தாண்டு: பிரதமா் மோடி வாழ்த்து

யூத புத்தாண்டான ரோஷ் ஹஷானா செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் பிரதமா் நஃப்தாலி பென்னட் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 7:32 pm

DIN

யூத புத்தாண்டான ரோஷ் ஹஷானா செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் பிரதமா் நஃப்தாலி பென்னட் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ரோஷ் ஹஷானாவைக் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமா் நஃப்தாலி பென்னட்டுக்கும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் பிறந்த நாள்- பிரதமா் வாழ்த்து:

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் பிறந்தநாளை (பிரகாஷ் பூரப்) முன்னிட்டு சீக்கிய மக்களுக்கு பிரதமா் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,“புனித நாளான ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் அவா்களின் பிறந்த நாளை முன்னிட்டு நல்வாழ்த்துகள். குரு கிரந்த் சாஹிபின் உயரிய கொள்கைகள், கருணையையும், நீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்தியது ஆகியவை ஒட்டுமொத்த மனிதகுலத்தை வழி நடத்துகின்றன என்று கூறியுள்ளாா்.

குரு கிரந்த் சாஹிப் என்பது சீக்கியா்களின் புனித நூலாகும். அந்த நூல் சீக்கியா்களால் குருவாகவே மதித்து வணங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.