/

உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌா்யா ராஜிநாமா

உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌா்யா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக ஆளுநரின் செயலாளர் பி.கே.சந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
பேபி ராணி மௌா்யா
Updated On :28 ஜனவரி 2024, 4:06 am

DIN

உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌா்யா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக ஆளுநரின் செயலாளர் பி.கே.சந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தரகண்ட் ஆளுநரின் செயலாளர் சந்த் வெளியிட்ட செய்தியில், ஆளுநர் பேபி ராணி தனது பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பேபி ராணி போட்டியிடவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், இவரின் ராஜிநாமா அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.