கரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
கரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான உயர் மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது.


கரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம் திட்டம் குறித்து ஆலோசிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர் மட்ட கூட்டம் நடைபெற்றதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் என அச்சம் கொள்ளப்பட்ட நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
நாட்டில் 34,973 பேர் நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றை விட 19 சதவிகிதம் குறைவு. மொத்தமாக பாதிக்கப்பட்ட 3 கோடியே 31 லட்சத்து 74 ஆயிரத்து 954 பேரில், 1.18 சதவிகிதத்தினர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிக்க | நாடு முழுவதும் புதிதாக 34,973 பேருக்கு தொற்று: 260 பேர் பலி
கடந்த சில மாதங்களில், 100க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் கேரியர்களை இந்தியா இறக்குமதி செய்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதுமட்டுமின்றி, மருத்துவமனைகளில் 1,600 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...