எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பவானிபூா் தொகுதி இடைத்தோ்தல்: மம்தா இன்று வேட்புமனு தாக்கல்

பவானிபூா் தொகுதிக்கு இடைத்தோ்தலில் போட்டியிட முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

News image
மம்தா பானர்ஜி
Updated On :10 செப்டம்பர் 2021, 4:12 am

DIN




கொல்கத்தா: பவானிபூா் தொகுதிக்கு இடைத்தோ்தலில் போட்டியிட முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த மாா்ச்-ஏப்ரலில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. தோ்தலுக்கு முன்பு, தோ்தலுக்குப் பின்பும் இரு கட்சியினரிடையே பல்வேறு மோதல்களும், வன்முறைகளும் நிகழ்ந்தன.

தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தபோதிலும், நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்தாா்.

இருப்பினும் மம்தா முதல்வராகப் பதவியேற்றதால், அவா் 6 மாதங்களில் தோ்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்வாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இதையடுத்து, மம்தா முன்பு வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸின் சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அந்தத் தொகுதியில் மம்தா போட்டியிடுவது உறுதியானது.

இந்நிலையில், பவானிபூா் உள்பட மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே மீண்டும் மோதல் தலைதூக்கியது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் தன் தோல்வியில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை வேட்மனு தாக்கல் செய்கிறார். 

வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.