6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து

தில்லியில் திங்கள்கிழமை காலை 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

News image
தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து
Updated On :13 செப்டம்பர் 2021, 7:20 am

DIN

தில்லியில் திங்கள்கிழமை காலை 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

தில்லி சப்ஜி மண்டி பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கட்டடத்திற்குள் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

இதுவரை இடிபாடுகளிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.