75 கோடி தடுப்பூசிகள்: இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
இந்தியாவில் 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
நாட்டில் திங்கள்கிழமை மட்டும் மாலை 5.30 மணி வரை 67 லட்சம் (67,04,768) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, செலுத்தப்பட்ட மொத்தம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியைத் தாண்டியது.
இதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் 75 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாகத் தடுப்பூசி செலுத்தி வரும் இந்தியாவை உலக சுகாதார அமைப்பு பாராட்டுகிறது. முதல் 10 கோடி தடுப்பூசிகளை செலுத்த இந்தியா 85 நாள்களை எடுத்துக்கொண்டது. இதுவே 65 கோடி தடுப்பூசிகளிலிருந்து 75 கோடி தடுப்பூசிகள் என்ற எண்ணிக்கையை அடைய இந்தியா 13 நாள்களை மட்டுமே எடுத்துக்கொண்டது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...