தில்லியில் புதிதாக 38 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 70,308 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 38 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. மேலும் 15 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர்கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 15,876 பேருக்கு கரோனா
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,288 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,12,805 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். பலி எண்ணிக்கை 25,083 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி இன்னும் 400 பேர் மட்டுமே நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,64,880 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 1,51,71,146 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...