இந்த மாதம் இறுதிக்குள் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
அதேவேளையில் அமெரிக்காவின் ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம், பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதுகுறித்து நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசியது:
உலக சுகாதார அமைப்பினர் அறிவியலின் அடிப்படையில் முடிவெடுக்க காலவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களின் பயணத்திற்கு பல்வேறு நாடுகள் அனுமதி அளிக்காததால், உலக சுகாதார அமைப்பு ஒத்துழைப்பு முக்கியமானது.
கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கத் தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் பரிமாறப்பட்டு வருகிறது. மேலும், ஆவணங்களின் சரிபார்ப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளதால், இம்மாத இறுதிக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். உலக சுகாதார அமைப்பினர் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

நடந்து சென்ற நபா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


