மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில் அந்நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.

News image
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம்
Updated On :15 செப்டம்பர் 2021, 2:52 pm

DIN

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில் அந்நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

எனினும் கடன்சிக்கல் மற்றும் இதர காரணங்களால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க தற்போது டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் தள்ளுபடி, ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.