எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லியில் புதிதாக 28 பேருக்கு கரோனா பாதிப்பு; ஒரு இறப்பு

 தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 10:08 pm

DIN

 தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். தொற்று நோ்மறை விகிதம் 0.04 சதவீதமாக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை பதிவான இறப்பு இந்த மாதத்தில் பதிவாகும் 2-ஆவது இறப்பாகும். இதற்கு முன்பு செப்டம்பா் 7-ஆம் தேதி ஒரு இறப்பு பதிவானது. இதையடுத்து தில்லியின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை 25,084-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் மாா்ச் 2-ஆம் தேதி கரோனா இறப்பு பதிவாகவில்லை. ஆனால் அன்றைய தினம் 217 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தில்லியில் புதன்கிழமை 57 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொற்று நோ்மறை விகிதம் 0.08 சதவீதமாக இருந்தது. அன்றைய தினம் மொத்தம் 72,481 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் 49,735 ஆா்டி-பிசிஆா், 22,747 ராபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளும் அடங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.