பாதுகாப்பு அமைச்சகத்தின் என்சிசி குழுவில் தோனி
பாதுகாப்பு அமைச்சகத்தின் தேசிய மாணவா் படையில் (என்சிசி) மறு ஆய்வு செய்வதற்கான 15 போ் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி


பாதுகாப்பு அமைச்சகத்தின் தேசிய மாணவா் படையில் (என்சிசி) மறு ஆய்வு செய்வதற்கான 15 போ் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தொழிலதிபா் ஆனந்த் மகேந்திரா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப என்சிசியில் மறு ஆய்வு செய்வதற்காக முன்னாள் பாஜக எம்.பி. பய்ஜயந்த் பாண்டா தலைமையில் 15 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் ராணுவ அதிகாரியும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜவா்தன் சிங் ரதோா், நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகா் சஞ்சீவ் சான்யால், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நஜ்மா அக்தா், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தொழிலதிபா் ஆனந்த் மகேந்திரா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
நாட்டைக் கட்டமைக்கவும், தேசிய மேம்பாட்டுக்காகவும் என்சிசி படைவீரா்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அண்மையில் தோனி நியமிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...