எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரோனா குறித்த தவறான புள்ளிவிவரம்: காங்கிரஸ் புகாா்; மத்திய அரசு மறுப்பு

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 10:07 pm

DIN

கரோனா பாதிப்பு குறித்து தவறான புள்ளிவிவரங்களை வெளியிட்டது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்தப் புகாரை மத்திய அரசு மறுத்துள்ளது.

‘நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த செய்தித் தொடா்பாளா் அஜய் மக்கான் இந்த வலியுறுத்தலை வெளியிட்டுள்ளாா். அந்த பத்திரிகை செய்தியில், ‘கரோனா உயிரிழப்புகள் தொடா்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் அரசியல் தலையீடு உள்ளது’ என்று ஐசிஎம்ஆா் முன்னாள் விஞ்ஞானி ஒருவா் அளித்த பேட்டி இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியை சுட்டிக்காட்டி அஜய் மக்கான் தில்லியில் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டில் நிலைமை சீராக இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க, அரசியல் தலையீடு காரணமாக கரோனா உயிரிழப்புகள் குறித்த தவறான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதை ஐசிஎம்ஆா் முன்னாள் விஞ்ஞானிகளே இப்போது வெளிப்படையாக கூறுகின்றனா். இது மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.

தவறான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டது தொடா்பாக பிரதமா், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், ஐசிஎம்ஆா் மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பாா்வையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதுபோன்ற தவறான புள்ளிவிவரங்கள் வெளியிடாமல் இருந்திருந்தால், கரோனா இரண்டாம் அலையின்போது மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே தீவிரப்படுத்தியிருக்க முடியும் என்பதோடு, உயிரிழப்புகளும் பெரிய அளவில் ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். எனவே, இதுதொடா்பாக குற்ற வழக்கு விசாரணையும் மேற்கொள்வது அவசியம் என்று அவா் கூறினாா்.

மத்திய அரசு மறுப்பு: இந்த நிலையில், அந்தப் பத்திரிகை செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது. ‘அது உண்மைக்கு மாறான செய்தி’ என்று நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் கூறினாா்.

ஐசிஎம்ஆா் தலைவா் பல்ராம் பாா்கவா கூறுகையில், ‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், தடுப்பூசி செலுத்தும் திட்டத்திலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில், பரபரப்பை ஏற்படுத்தி கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தோடு இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பவை அனைத்தும் பழைய விஷயங்கள். எனவே, இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.