பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜிநாமா
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அமரீந்தர் சிங் அளித்துள்ளார்.


பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அமரீந்தர் சிங் அளித்துள்ளார்.
மேலும், தனது தலைமையிலான அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்தார் அமரீந்தர் சிங்.
பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு இன்று மாலை நவ்ஜோத் சிங் சித்து அழைப்பு விடுத்திருந்த நிலையில், கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்துக்கு புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க அமரீந்தர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராகுல் மற்றும் பிரியங்கா ஆதரவளித்தனர். நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சித் தலைவரானது முதலே, அவருக்கும், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்த நிலையில், சண்டிகரில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அமரீந்தர் சிங் இன்று அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...