டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜீத்துக்கு மோடி வாழ்த்து

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜீத் சிங் சன்னிக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப்படம்)
Updated On :20 செப்டம்பர் 2021, 7:02 am

DIN

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜீத் சிங் சன்னிக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சரண்ஜீத் சிங்கிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், புதிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜீத் சிங் சன்னிக்கு வாழ்த்துக்கள். பஞ்சாப் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பஞ்சாப் அரசுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.”

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

காங்கிரஸின் மேலிட உத்தரவையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.