புது தில்லி: செல்லப்பிராணிகள் மீதான அன்பை பலரும் பல விதங்களில் வெளிப்படுத்துவார்கள், சென்னையைச் சேர்ந்த நபர், தனது செல்ல நாயுடன் விமனத்தில் பயணிக்க, ஏர் இந்தியா விமானத்தின் ஒட்டுமொத்த வணிக வகுப்பு இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார்.
வணிகப் வகுப்பு டிக்கெட் ஒன்றின் விலை ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இருக்கும். ஒரு விமானத்தில் சுமார் 12 இருக்கைககள் இருக்கும் நிலையில், அனைத்தையும் ஒரே நபர் முன்பதிவு செய்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.2.4 லட்சம் செலவானது. சுமார் இரண்டு மணி நேர விமானப் பயணத்துக்கு அவர் தனது செல்லப் பிராணியுடன் வருவதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டுள்ளார்.
பொதுவாகவே விமானங்களில் செல்லப்பிராணிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சில விதிமுறைகளுடன், செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு வர ஏர் இந்தியா அனுமதி வழங்கும். இதற்காகக் கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கும்.
ஒருவேளை, வணிக வகுப்பில் செல்லப் பிராணியுடன் ஒரு பயணி பயணிக்க விரும்பினால் அவர்களுக்கு கடைசி இருக்கைதான் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை ஏர் இந்தியா உள்ளூர் விமானத்தில் சுமார் 2000 செல்லப் பிராணிகள் பயணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


