ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு, ஏமாற்றம் அடைந்த துபை ஊழியர்

கேரளத்தின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி (45) என்பவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்ததாக நேற்று(செப்-20) செய்தி வெளியானது. ஆனால் உண்மையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்குத் தான் பரிசு கிடைத்திருப்பதாக
ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு, ஏமாற்றம் அடைந்த துபை ஊழியர்
ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு, ஏமாற்றம் அடைந்த துபை ஊழியர்

கேரளத்தின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி (45) என்பவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்ததாக நேற்று(செப்-20) செய்தி வெளியானது. ஆனால் உண்மையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்குத் தான் பரிசு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பனமரம் பகுதியைச் சேர்ந்தவரான சைதல்வி துபையில் ஒரு உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் இருக்கும் அவருடைய நண்பரிடம் ’கூகுல் பே’ மூலம் பணம் அனுப்பி 'ஓணம் பம்பர்’ லாட்டரி ஒன்றை வாங்கச் சொல்லியிருக்கிறார். நண்பரும் கடையில் இருந்த கடைசி சில டிக்கெட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சைதல்வியின் வாட்ஸ் ஆப்பிற்கு அதை அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்-19) அந்த லாட்டரி சீட்டின் முடிவு வெளியானது.ஆனால் அதை கவனிக்காதவருக்கு அதே கட்டடத்தில் இருக்கும் வேறு ஒரு நண்பர் டிஈ 645465 என்ற சீட்டின் எண்ணை இணையத்தின் மூலம் சரிபார்த்து முதல் பரிசாக ரூ.12 கோடி விழுந்ததை அறிவித்திருக்கிறார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சைதல்வி மற்றும் அவருடைய நண்பர்கள் இந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டாடித் தீர்த்தனர்.ஆனால் அதற்கு அடுத்த நாள் ஆட்டோ ஒட்டுனர் ஒருவர் ரூ.12 கோடிக்கான லாட்டரி சீட்டை வாங்கிய கடையில் ஒப்படைத்ததும் பெரிய குழப்பம் உருவானது. 

பின் தெளிவாக விசாரித்த போது சைதல்விக்கு அவருடைய நண்பர் விளையாட்டாக பரிசு விழுந்த சீட்டின் நகலை அனுப்பியது தெரிய வந்திருக்கிறது. இதனால் துபை ஊழியர் பெரிய ஏமாற்றம் அடைந்தார்.

பரிசுக்குச் சொந்தக்காரரான ஆட்டோ ஓட்டுனர் கிடைக்கும் பணம் மூலம் தன்னுடைய கடன்களை அடைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

முதல்பரிசான ரூ. 12 கோடியில், வருமான வரி, ஏஜெண்டு கமிஷன் போக  ரூ. 7.56 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com