ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்த 60 தடுப்பூசி விரைவு வாகனங்களை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் இதனை இன்று தொடக்கிவைத்தார்.
கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்த 60 தடுப்பூசி விரைவு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 12,000 பேருக்கு தடுப்பூசி போடும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், தடுப்பூசி விரைவு வாகனங்கள் கிராமப்புறங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும். மக்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தடுப்பூசி விரைவு வாகனங்களை இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
இதுகுறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், 'மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களுக்கும் வாகனங்கள் அனுப்பிவைக்கப்படும். கரோனா வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களையும், தடுப்பூசி போடாத நபர்களை நேரடியாகச் சென்று அணுகுவதே இத்திட்டத்தின் நோக்கம்' என்றார்.
மேலும், சுகாதாரத்துறை செயலாளர் அருண் குமார் சிங், 'முடிந்தவரை அதிகமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடுகிறோம், ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இப்போது நாள் ஒன்றுக்கு 1-1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். தடுப்பூசிகள் இருந்தால் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக உயர்த்தப்படும்.
தடுப்பூசி விரைவு வாகனங்கள் இந்த ஆண்டு டிசம்பர் வரை செயல்படுத்தப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய இந்தியர் தேர்வு!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துகிறதா? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

தேர்தல் அரசியலில் ஆர்வமில்லை! இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்!

'அடோப்' நிறுவன சிஇஓ சாந்தனு ராஜிநாமா!
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

