ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மருந்தின்றி மூடப்பட்ட கரோனா தடுப்பூசி மையம்: மும்பையின் அவலம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா தடுப்பூசி மையம் மருந்துகள் இருப்பின்றி மூடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2021, 6:29 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா தடுப்பூசி மையம் மருந்துகள் இருப்பின்றி மூடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  தடுப்பு மருந்துகளின்றி தடுப்பூசி மையம் மூடப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் கரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பு மருந்துகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்களப் பணியாளர்கள் மருத்துவர்களுக்கு முதல் கட்டமாகவும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது கட்டமாகவும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது கட்டமாகவும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதனிடையே மும்பையில் உள்ள பிகேசி ஜம்போ தடுப்பூசி மையத்தில் கரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு வந்த நிலையில், இன்று தடுப்பு மருந்துகள் முழுவதும் தீர்ந்ததால் இன்று தடுப்பூசி மையம் மூடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.