கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எதிர்க்கட்சிகள் அமளி: பிற்பகல் 3.30 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

News image
பிற்பகல் 3.30 மணிவரை மக்களவை ஒத்திவைப்பு
Updated On :2 ஆகஸ்ட் 2021, 9:18 am

ANI

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 9 நாளாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அவையின் மாண்பை குலைக்கும் விதமாக உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டாம் என்று இரு அவைத் தலைவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய அவையில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

மாநிலங்களவை ஒத்திவைப்பதற்கு முன்னதாக உள்நாட்டு கப்பல் மசோதா 2021 நிறைவேற்றப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.