யார் எதிர்த்தாலும் எங்களுக்கு கவலையில்லை, விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தமிழக - கர்நாடக அரசுகளுக்கு இடையே மேக்கேதாட்டு பிரச்னை தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகத்தை ஆளும் பாஜகவிற்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | மேக்கேதாட்டுவில் அணைக்கு எதிராக தஞ்சாவூரில் பாஜக உண்ணாவிரதம்
இதுகுறித்து கர்நாடக முதல்வர் கூறியதாவது,
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக எதிர்த்து வருகிறார்கள். யார் எதிர்த்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. விரைவில் உரிய ஆவணங்களுடன் அனுமதி பெற்று மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம். அணை கட்டுவதில் எந்த மாற்றமும் இல்லை, யார் போராடினாலும் பரவாயில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


