இஓஎஸ்-03 செயற்கைக் கோளை நிலைநிறுத்தும் முயற்சி தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

புவிக் கண்காணிப்பு  பணிகளுக்காக விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட்டின் இஓஎஸ் 03 செயற்கைக் கோளை புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
செயற்கைக் கோளை நிலைநிறுத்தும் முயற்சி தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரிடர்களை ஆராய்வதற்காக இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட  இஓஎஸ்-03 என்ற அதிநவீன செயற்கைக்கோள் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

7 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்டிருந்த இந்த செயற்கைக் கோளின் மூலம் 3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்க முடியும்.

இந்நிலையில் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக் கோளை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் கிரையோஜெனிக் எஞ்சினின் மூன்றாம் தளத்தில் ஏற்பட்ட கோளாறுகளின் காரணமாக செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com