ஒலிம்பிக் வீரர்களுக்குப் பாராட்டு: பிரதமர் மோடி உரை

​சுதந்திர தின உரையின்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஒலிம்பிக் வீரர்களுக்குப் பாராட்டு: பிரதமர் மோடி உரை


சுதந்திர தின உரையின்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதன்பிறகு, நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றத் தொடங்கினார்.

பிரதமர் மோடியின் உரை: 

"சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவில்கொள்ள வேண்டிய தினம் இது.

கரோனா பெருந்தொற்றின்போது ஒவ்வொரு தருணத்திலும் மற்றவர்களுக்கு சேவையாற்றி உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றிய நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் பணியிலிருந்த விஞ்ஞானிகள் மற்றும் கோடிக்கணக்கான நாட்டு மக்கள் அனைவருமே பாராட்டுகளுக்குத் தகுதியானவர்கள். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்மைப் பெருமையடையச் செய்த வீரர்கள் இன்று நம்முடன் உள்ளனர். அவர்களது சாதனையை நாட்டு மக்கள் இன்று பாராட்ட வேண்டும். அவர்கள் நமது இதயத்தை மட்டும் வெல்லவில்லை. எதிர்கால தலைமுறையினரை சாதிக்கத் தூண்டியுள்ளனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com