ஆப்கனில் இந்திய தூதரகம் மூடல்: இந்தியர்கள் வெளியேற ‘இ-விசா’ அறிமுகம்

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதையடுத்து, இந்தியர்கள் வெளியேற ‘இ-விசா’வை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஆப்கனிலிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்த மக்கள்
ஆப்கனிலிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்த மக்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதையடுத்து, இந்தியர்கள் வெளியேற ‘இ-விசா’வை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.

இந்நிலையில், ஆப்கனில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்திய தூதரகம் மூடப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, தூதரக அதிகாரிகளை உடனடியாக தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதையடுத்து, இந்திய விமானப் படையின் விமானம் மூலம் இன்று காலை தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பத்திரமாக மீட்டு காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர். 

மேலும், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் நேற்று முதல் குவிந்து வருவதால், இந்தியர்களை பத்திரமாக மீட்க காபூலில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளதால், ஆப்கனிலிருக்கும் இந்தியர்கள் வேகமாக வெளியேறுவதற்காக விரைந்து அனுமதி அளிக்கும் வகையில் இ-விசா முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com