அஸ்ட்ராஜெனெகாவைவிட ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் குறைவு எனத் தகவல்

அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறுகையில், "தொடக்கத்தில், கரோனாவுக்கு எதிராக ஃபைசர்-பயோஎன்டெக்கின் இரண்டு தவணை தடுப்பூசி நல்ல செயல்திறனை வெளிப்படுத்துகிறது. ஆனால், அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி பல மாதங்கள் கழித்து பார்த்தால், தீவிரத்தன்மை கொண்ட வைரஸ்கள் மற்றும் அறிகுறிகள் தென்படும் நோய்யுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டு 4, 5 மாதங்களில் இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறனும் ஒரே மாதிரியாக உள்ளது. நீண்ட கால ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது" என்றார்.

பிரிட்டன் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மற்ற விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு இது இன்னும் அனுப்பப்படவில்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் இயக்கவியல் அஸ்ட்ராஜெனெகாவிலும் ஃபைசரிலும் பெரும் வேறுபாடு அடைகிறது என நஃபீல்ட் கல்லூரி மருத்துவ துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 58 சதவிகித மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகும், பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து கவலை எழுப்பப்பட்ட நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அங்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றவர்களை காட்டிலும் கரோனா வைரஸ் நோயால் பாதிப்படைந்தவருக்கு தடுப்பூசியால் கிடைக்கும் பாதுகாப்பு அதிகரித்துள்ளது என ஆக்ஸ்போர்டு ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com