உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் வேலையின்மை பதிவு பிரசாரம் நாளை(ஆக.20) தொடங்குகிறது.
உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் இதுகுறித்து கூறுகையில்,
நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நாளை(ஆக.20) முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, உத்தரகண்ட் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநிலத்தில் வேலையின்மை பதிவு பிரசாரம் தொடங்குகிறது.
வேலையில்லாதவரிகளையும் இளைஞர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த பிரசாரம் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த பிரசாரத்தை காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், மாநிலத் தலைவர் கணேஷ் கொடியால், எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் மற்றும் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
முன்னதாக, நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன் இந்த பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

ஈச்சங்காடு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வணிக மேம்பாட்டுக் கூட்டம்

இமாம்பசந்த் மாம்பழம் விற்பனை விறுவிறுப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


