நாட்டில் புதிதாக 37,593 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,593 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,593 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 37,593 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,25,12,366 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 34,169 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 648 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 3,17,54,281 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,35,758 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 3,22,327 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 61,90,930 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை மொத்தம் 59,55,04,593 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...