புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விபத்தில் வனத் துறை அலுவலா் உயிரிழப்பு

படப்பையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வனத்துறை அலுவலா் உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- பிரதிப் படம்
Updated On :14 மார்ச் 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

படப்பையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வனத்துறை அலுவலா் உயிரிழந்தாா்.

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூா் பகுதியை சோ்ந்தவா் சுரேஷ் சகாயராஜ்(54). இவா் குன்றத்தூா் வனச் சரகத்தில் வனத்துறை அலுவலராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், சுரேஷ் சகாயராஜ் சனிக்கிழமை வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் படப்பையில் இருசக்கர வாகனத்தில் ஒரகடம் நோக்கிச் சென்று கொண்டிரு ந்தாா்.

அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சுரேஷ் சகாயராஜ் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.