மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் கைது

மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை  வழக்கில் வெளிமாநில தொழிலாளர்கள் 4 பேர் கர்நாடக காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐவர் கைது
மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐவர் கைது

மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை  வழக்கில் வெளிமாநில தொழிலாளர்கள் 4 பேர் கர்நாடக காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

மைசூருவில் 23 வயது மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐவரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் தனியார் கல்லூரி மாணவி தனது காதலருடன் கடந்த 24ம் தேதி மைசூரு சாமுண்டி மலையடிவார லலிதா திரிபுர பகுதிக்கு சென்று பேசிக் கொண்டிருந்துள்ளார்ர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், காதலனை தாக்கி விட்டு, கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தாகக் கூறப்படுகிறது.

மேலும் ரூ.4 லட்சம் பணம் கேட்டு, மிரட்டி கல்லூரி மாணவியையும், காதலனையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மைசூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இத்துடன் தொடர்புடைய 6 பேரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேர் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ளதாக செல்லிடப் பேசி அலைவரிசை மூலம் அறிந்த காவலர்கள் சனிக்கிழமை தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, தலைமறைவாக இருந்த சேவூர், பேரநாயக்கன்புதூர் தண்ணீர்பந்தல் செல்வபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ்(எ) அரவிந்த்(21), லூர்துபுரத்தில் தலைமறைவாக இருந்த தாளவாடி சூசையபுரத்தைச் சேர்ந்த ஜோசப்(28), லூர்துபுரம் கருவலங்காடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் (எ) முருகேசன்(22), சேவூர் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை மைசூரு காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com