6,7,8-ம் வகுப்புகளுக்கு செப். 6 முதல் பள்ளிகள் திறப்பு: கர்நாடகம்

கர்நாடகத்தில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். 

கடந்த 23-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

எனினும் தொற்று பாதிப்பு விகிதம் 2 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ள தாலுகாக்களில் மட்டுமே இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் கூறினார். 

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, கேரள எல்லைப்பகுதியுடன் உள்ள 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று விகிதம் 2 சதவிகிதத்திற்கு கீழ் உள்ள தாலுகாக்களில் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 

வகுப்புகளில் 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும். ஒரு வாரத்தில் ஐந்து நாள்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com