அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

‘அனைத்து குழந்தைகளுக்கும் அம்பேத்கர் வரலாறு ஒளிபரப்பப்படும்’: தில்லி முதல்வர்

தில்லியில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் இலவசமாக ஒளிபரப்பப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் இலவசமாக ஒளிபரப்பப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய 'சட்டமேதை' டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் அம்பேத்கரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தில்லி முதல்வர் வெளியிட்ட செய்தியில்,

நாட்டு மக்கள் 75ஆம் ஆண்டு சுதந்திர ஆண்டை கொண்டாடி வருகின்றோம். இந்த தருணத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். அம்பேத்கரின் வாழ்க்கையை அனைத்து குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, ஜனவரி 4 முதல் நேரு மைதானத்தில் அவரது வாழ்க்கை வரலாறு நாடகத்தை ஒளிபரப்ப தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 50 முறை ஒளிபரப்பப்படும் இந்த நாடகத்தை மக்கள் அனைவரும் இலவசமாக காணலாம். இந்தியாவில் முதல்முறையாக அம்பேத்கரின் வாழ்க்கையை அனைத்து குழந்தைகளின் மத்தியிலும் கொண்டு செல்லும் விதமாக அரசு முயற்சி எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com