ஆந்திரத்திலும் ஒமைக்ரான்

ஆந்திரத்தில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆந்திரத்தில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுதொடர்பாக வெளியான செய்திக் குறிப்பு:

"34 வயதுடைய நபர் ஆந்திரத்திலிருந்து மும்பை விமான வந்தபோது அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த நவம்பர் 27-ம் தேதி விசாகப்பட்டினம் வர அனுமதிக்கப்பட்டார்.

விஜயநகரத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுபரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவருடைய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கான ஹைதராபாத் அனுப்பப்பட்டது. இதில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. டிசம்பர் 11-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எவரும் மாநிலத்தில் இல்லை."

நாட்டில் இதுவரை தில்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com