இரண்டு மணி நேரத்திலேயே முடிவுகளை தரும் ஒமைக்ரான் பரிசோதனை கருவி

ஒமைக்ரான் கரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், விமான நிலையங்களில் பரிசோதனை முடிவுகளுக்காக காத்து கிடக்கும் பயணிகளுக்கு இது நிம்மதி பெருமூச்சுயை அளித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒமைக்ரான் குறித்த புதிய தகவல்களும், ஆய்வுகளும் கவலையடைய செய்து வரும் இந்த சமயத்தில், அசாம் திப்ருகரில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இரண்டு மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை தரும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் கரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், விமான நிலையங்களில் பரிசோதனை முடிவுகளுக்காக காத்து கிடக்கும் பயணிகளுக்கு இது நிம்மதி பெருமூச்சுயை அளித்துள்ளது. 

கடந்த நவம்பர் 24ஆம் தேதி முதல், இந்த பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டுவருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,000 பேரின் மாதிரிகளை கொண்டு இந்த கருவியை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த கருவிக்கு உரிமம் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. அடுத்த வாரத்திற்குள், ஆய்வுக்கூடங்களில் இது பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானியும் மருத்துவருமான பிஸ்வஜ்யோதி போர்க்கோட்யா தலைமையிலான குழு இந்த கருவியை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அவர் விரிவாக கூறுகையில், "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், புதிய ஒமைக்ரான் கரோனாவை கண்டறிவதற்காக நீர்ப்பகுப்பு ஆய்வு அடிப்படையிலான நிகழ்நேர ஆர்டி-பிசிஆர் சோதனை கருவியை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இதனால் புதிய உருமாறிய கரோனாவை 2 மணி நேரத்திற்குள் கண்டறிய முடியும்.

ஒமைக்ரான் கரோனா வைரஸின் குறிப்பிட்ட செயற்கை மரபணு துண்டுகளை இந்த புதிய கருவி சோதனைக்கு உள்ளாக்குகிறது. குறிப்பாக, புரத கூர்முனைகளின் இரண்டு வெவ்வேறு தனித்துவமான பகுதிகளில் சோதனை செய்கிறது" என்றார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் உருவாக்கிய இந்த கருவியை, கொல்கத்தாவை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனமே 100 சதவிகிதம் தயாரிக்கவுள்ளது. பொது மற்றும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்பில் இது தயாரிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com