விபின் ராவத் பேசிய இறுதி காணொளி; என்ன பேசினார் அவர்?

இந்த நிகழ்ச்சியில் மறைந்த முப்படை தலைமை தளபதி விபின் ராவத் பேசிய கடைசி காணொலி ஒளிரப்பட்டது.
விபின் ராவத்
விபின் ராவத்

கடந்த 1971ஆம் ஆண்டு, இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடைபெற்ற போரின் காரணமாக வங்கதேசம் உருவானது. கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதிக்கு, ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியா விடுதலை பெற்று தந்தது. 

இந்த போரில் இந்தியா பெற்ற வரலாற்று வெற்றியின் 50ஆம் ஆண்டு நினைவு கூறும் வகையிலும் இந்திய, வங்கதேச நட்புறவைக் குறிக்கும் நோக்கிலும் இந்திய கேட் பகுதியில் ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் கொண்டாட்டம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் மறைந்த முப்படை தலைமை தளபதி விபின் ராவத் பேசிய கடைசி காணொலி ஒளிரப்பட்டது. அதில், "இந்த ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் விழாவில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

1971 போரில் வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு விழாவை ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் என்ற பெயரில் நாம் கொண்டாடுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நமது வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அவர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். இதற்காக டிசம்பர் 12 முதல் 14 வரை இந்தியா கேட்டில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

நமது வீர வீராங்கனைகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவது பெருமைக்குரியது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும். நமது படைகளை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம்" என விபின் ராவத் பேசியுள்ளார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமை தளபதி விபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com