இந்துக்களின் ஆட்சியை கொண்டு வர விரும்புகிறோம்: ராகுல் காந்தி

"யார் இந்து? எல்லா மதத்தையும் மதித்து, யாருக்கும் பயப்படாதவர்தான் இந்து. இப்போது, ஆட்சியில் இருப்பவர்கள் போலி இந்துக்கள்"
இந்துக்களின் ஆட்சியை கொண்டு வர விரும்புகிறோம்: ராகுல் காந்தி

விலை உயர்வு, விவசாயிகள் விவகாரம், குரோனி முதலாளித்துவம் உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமரிசித்துவருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்துத்துவ கொள்கையை கடுமையாக சாடினார்.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸின் கொள்கையான இந்துத்துவத்தை, கடந்த மாதம் நடைபெற்ற உள்கட்சி கூட்டத்திலும் ராகுல் விமர்சித்து பேசியிருந்தார். பெரும் திரளான மக்கள் மத்தியில் பேச தொடங்கிய அவர், "நான் ஒரு இந்து. இவர்கள் அனைவரும் இந்துக்கள். அவர்கள் இந்துத்துவவாதிகள். உங்களுக்காக விளக்கி சொல்கிறேன்.

உண்மையை தேடி பயணம் மேற்கொண்டவர் அண்ணல் காந்தி. நாதுராம் கோட்சேவோ, மூன்று தோட்டாக்களை கொண்டு அவரை சுட்டு வீழ்த்தினார். (கோட்சே) அவர் ஒரு இந்துத்துவவாதி. ஒரு இந்து சத்தியாகிரகத்தில் ஆர்வம் கொண்டவர். இந்துத்துவாவாதிகள் அதிகாரத்திற்குப் பின் தான் செல்வார்கள். அவர்கள் உண்மையைப் பற்றி கவலைப்படுவதில்லை.

யார் இந்து? எல்லா மதத்தையும் மதித்து, யாருக்கும் பயப்படாதவர்தான் இந்து. இப்போது, ஆட்சியில் இருப்பவர்கள் போலி இந்துக்கள். இந்தியாவில் இந்துக்களின் ராஜ்ஜியம் நடைபெறவில்லை. இந்துத்துவவாதிகளின் ராஜ்ஜியம் நடைபெற்றுவருகிறது. இந்த இந்துத்துவவாதிகளை அகற்றி இந்துக்களின் ஆட்சியை கொண்டுவரவே நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கட்சியின் உள்கட்சி கூட்டத்தில் பேசிய அவர், "ஒரு சீக்கியரையோ இஸ்லாமியரை தாக்க இந்து மதம் போதிக்கிறதா? நிச்சயமாக, இந்துத்துவம்தான், அப்படி போதிக்கிறது.

மற்ற மதத்தவரை தாக்க வேண்டும் என எந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது? நான் பார்த்ததில்லை. நான் உபநிடதங்களைப் படித்திருக்கிறேன். அதில், அப்படி எழுதப்படவில்லை. இந்துத்துவத்திற்கு இந்து மதத்திற்கும் வித்தியாசம் இருப்பதாக நாங்கள் கூறுகிறோம். இது ஒரு எளிய தர்க்கம். நீங்கள் ஒரு இந்து என்றால் உங்களுக்கு ஏன் இந்துத்துவம் தேவை? உங்களுக்கு ஏன் இந்தப் புதிய பெயர் தேவை?" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com