நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசாவில் நீர்மூழ்கிக் கப்பல்கலைத் தாக்கி அழிக்கும் நவீன ரக டர்பிடோ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசாவில் நீர்மூழ்கிக் கப்பல்கலைத் தாக்கி அழிக்கும் நவீன ரக டர்பிடோ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

பலாசூர் கடற்கரையோரம் நடத்தப்பட்ட சோதனையில், சூப்பர் சானிக் ஏவுகணையுடன் இணைந்து ஏவப்பட்ட டார்பிடோ வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது.

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நவீனரக டர்பிடோ ரக எறிகுண்டு தற்போது பயனில் உள்ளவற்றில் நீண்ட தூர இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. 

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள, நிலத்தில் இருந்து வானில் குறைந்த தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை(விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம்) டிச. 7-ஆம் தேதி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடிய சந்த் எனப்படும் தொலைவில் இருந்து தாக்கும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை கடந்த டிச.11-ஆம் தேதி நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com