வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பள்ளிகளில் பாலியல் பிரச்னையை தடுக்க அரசின் திட்டங்கள் என்ன? மக்களவையில் கனிமொழி

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளை தடுக்க மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.

News image

மக்களவையில் கனிமொழி

Updated On :13 டிசம்பர் 2021, 9:26 am

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளை தடுக்க மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.

சமீபகாலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்த புகார்கள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து மக்களவையில் கனிமொழி பேசியதாவது:

தற்போதைய சூழலில் கல்விதான் பெண்களுக்கான ஆதாரமாக இருக்கின்றது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் மீது ஏற்படும் பாலியல் கொடுமைகள் தொடர்ந்து பத்திரிகை செய்திகளில் வெளிவருகின்றன.

இதை தடுக்க அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார், “மாணவிகளை பாதுகாக்க பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அளித்துள்ளது. மாநில அரசுகளும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.