
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா
தேர்தல்கள் மூலம் மக்களைப் பிரிக்காமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்தும் செல்லும் பிரதமரே தேவை என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகெளடா வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | ''பாஜக மிரட்டுகிறது'': ஆன்டி இந்தியன் தயாரிப்பாளர் புகாரால் பரபரப்பு
அப்போது பேசிய பரூக் அப்துல்லா, “அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் பிரதமரே நமக்கு தேவை. தங்களது அரசியலுக்காக மக்களை பிரிக்கும் வகையிலேயே தேர்தல் தற்போது நடந்து வருகிறது.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | இந்தோனேசியா: சுனாமி எச்சரிக்கைக்குப் பின் கடலில் நீர்மட்டம் உயர்வு
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவிற்கு பிரிவினைவாதம் தேவையில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இந்தியர்களும், இந்தியாவும் பிரிக்கப்பட்டு வருகிறது. மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்கும் அரசியல் முடிவுக்கு வரும் காலம் தூரமில்லை” என பரூக் அப்துல்லா குறிப்பிட்டார்.