
புது தில்லி: நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அந்தத் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 220-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | SBI - வங்கியில் 1226 அதிகாரிகள் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இதில் ஜம்மு-காஷ்மீா் 3 பேருக்கு செவ்வாய்க்கிழமை முதல்முறையாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளாத நிலையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.