குளிர்காலக் கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் முன்கூட்டியே நிறைவு

மக்களவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா புதன்கிழமை அறிவித்தார்.
குளிர்காலக் கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் முன்கூட்டியே நிறைவு

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் புதன்கிழமை அறிவித்தனர்.

குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே 12 எம்.பி.க்கள் இடைநீக்கம், லக்கிம்பூர் விவகாரம், தேர்தல் திருத்த மசோதா, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பிரச்னைகளை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியவுடன் காலவரையின்றி அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர்கள் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து நாளை முடிய வேண்டிய கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.

அதேபோல், மாநிலங்களவையும் நிறைவு பெறுவதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் தேர்தல் திருத்த மசோதா, வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com