பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

நாட்டில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 387 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 4:35 am

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 7,286 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 387 பேர் பலியாகியுள்ள நிலையில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,79,520 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 3,42,23,263 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 77,032 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை 141 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.