தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பனிமூட்டத்தால் மேற்குவங்கத்தில் பயங்கர விபத்து: 13 பேர் பலி; 18 பேர் காயம்

பனிமூட்டம் காரணமாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி நகரில் நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.

News image
பனிமூட்டத்தால் மேற்குவங்கத்தில் பயங்கர விபத்து: 13 பேர் பலி; 18 பேர் காயம்
Updated On :20 ஜனவரி 2021, 5:51 am

ANI


ஜல்பைகுரி: பனிமூட்டம் காரணமாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி நகரில் நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.

கார் ஒன்று மீது சுமை ஏற்றப்பட்ட டிரக் வேகமாக மோதியதில், சாலைத் தடுப்பை தாண்டி வலது பக்க சாலையில் விழுந்தது. அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது மோதியது, இந்த விபத்தில் நான்கு வாகனங்களும் சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவலர்களும், அருகே இருந்த கிராம மக்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிரக்கின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.