எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குடியரசுத் தலைவர் உரையின்போது எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையின்போது ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினார்.

News image
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையின்போது ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி. எதிர்ப்பு
Updated On :29 ஜனவரி 2021, 8:28 am

DIN

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையின்போது ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினார்.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி குடியரசுத் தலைவரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

நடப்பாண்டிற்கான முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

குடியரசுத் தலைவர் உரையாற்றும்போது மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்றும், மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி.யான ஹனுமன் பெனிவல் அவையிலிருந்து எழுந்து குடியரசுத் தலைவர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று பதாகையினை உயர்த்திப் பிடித்து முழக்கங்களை எழுப்பினார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.