லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாட்டில் 30,093 பேருக்கு கரோனா; 45,254 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,093 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 374 பேர் பலியாகினர்.

News image
நாட்டில் 30,093 பேருக்கு கரோனா; 45,254 பேர் குணமடைந்தனர்
Updated On :20 ஜூலை 2021, 4:52 am

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,093 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 374 பேர் பலியாகினர்.

கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு நாட்டில் இன்று குறைந்தபட்ச பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இறுதியாக கடந்த மார்ச் 30ஆம் தேதி நாட்டில் 354 பர் கரோனாவுக்கு பலியாகினர்.

அதே வேளையில் 45,254 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,03,53,710 பேர் குணமடைந்துள்ளனர். 

நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இன்று காலை நிலவரப்படி நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,06,130 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,11,74,322 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 4,14,482 ஆகவும் உள்ளது.
 
தடுப்பூசி:

நாட்டில் இதுவரை மொத்தம் 41.18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.