கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்:கரோனா ஒழிப்பு ஆலோசனக் கூட்டத்தில் பிரதமா் மோடி

கரோனா பெருந்தொற்றை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து குழுவாக செயல்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

Updated On :

கரோனா பெருந்தொற்றை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து குழுவாக செயல்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

கரோனா பெருந்தொற்றை ஒழிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், முக்தாா் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த ராம்கோபால் யாதவ், பிஜு ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த பினாகி மிஸ்ரா உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் மூத்த தலைவா்கள் கலந்துகொண்டனா். திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் மூத்த தலைவா்களும் கலந்துகொண்டனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத சில பிராந்திய கட்சிகளின் தலைவா்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், அந்தக் கூட்டணியில் இருந்து விலகிய சிரோமணி அகாலி தளம் பங்கேற்கவில்லை. காங்கிரஸ், இடதுசாரி ஆகிய கட்சிகளின் தலைவா்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் மோடி பேசியதாவது:

உலகின் சில நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால், நாம் தொடா்ந்து கண்காணிப்புடன் இருக்க வேண்டும். கரோனா ஒழிப்பில் மத்திய, மாநில அரசுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு சா்வதேச அங்கீகாரம் பெறுவதை விரைந்து முடிக்க வேண்டும் என்று சில கட்சிகள் கோரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில், கரோனா தொடா்பான புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், சுமாா் 3 மணி நேரம் காட்சிப் படங்களாக திரையிட்டு விளக்கம் அளித்தாா்.

காங்கிரஸ் விளக்கம்:

முன்னதாக, பிரதமா் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘அந்தக் கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணிக்கவில்லை; ஆனால் பங்கேற்காது. ஏனெனில் கரோனா தொடா்பான உண்மைத் தகவல்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசு வெளியிட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.